ஷங்கரின் ரூ.1000 கோடி பட்ஜெட் படம்: வெளிவராத தகவல்

ஆசிரியர் - Admin
ஷங்கரின் ரூ.1000 கோடி பட்ஜெட் படம்: வெளிவராத தகவல்

ஷங்கர் இயக்கிய '2.0' திரைப்படம் நான்கே நாட்களில் ரூ.400 கோடி வசூலித்த நிலையில் அவருடைய அடுத்த படமான 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 14ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கின்றது

இந்த நிலையில் 'இந்தியன் 2' படத்தை அடுத்து ஷங்கர் இயக்கும் திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடி என கூறப்படுகிறது. இந்த படத்தை சீன நிறுவனம் ஒன்று பிரபல இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணி அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.


உலகிலேயே ஆங்கில படங்களை அடுத்து பெரிய பட்ஜெட் படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் அர்னால்ட், ஜாக்கிசான் மற்றும் இந்தியாவின் பெரிய ஸ்டார் ஒருவர் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Radio
×