SuperTopAds

போா்குற்றங்களுக்கான விசாரணையை கைவிட்டுள்ளோமா..? அப்பட்டமான பொய் என்கிறது தமிழ்தேசிய கூட்டமைப்பு.

ஆசிரியர் - Editor I
போா்குற்றங்களுக்கான விசாரணையை கைவிட்டுள்ளோமா..? அப்பட்டமான பொய் என்கிறது தமிழ்தேசிய கூட்டமைப்பு.

தமிழ்தேசிய கூட்டமைப்பு போா்குற்ற விசாரணைகளை கைவிட்டுவிட்டதாக கூறப்படும் செய்திகள் அப்பட்டமான பொய் செய்தி கள் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியு ள்ளாா். 

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினா் மேலும் கூறியுள்ளதாவது, 

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலமைக்கு தீர்வு எட்ட முயற்சிக்கும் நிலையில் திடமான அரசு அமைய எமது ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படும் நிலமையில் அது தொடர்பில் பல பேச்சுக்கள் இடம்பெற்றன. இவ்வாறு இடம்பெற்ற பல பேச்சுக்களிலும் 

இம்முறை 10ற்கும் மேற்பட்ட நாடாறுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். குறிப்பாக நாடாளுமன்றில் அதிக ஆசண ஆதரவு உடைய ஐ.தே.முன்னணியானது எமது ஒத்துழைப்பு தொடர்பில் பேச்சு நடாத்தியவேளையில் கூட்டமைப்பின் சார்பில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குகொண்டிருந்தோம். 

இதில் பேசிய பல விடயங்கள் கூறப்படவில்லை என்ற விடயம் உண்மையானது. ஆனால் வெளியில் கூறப்படாத விடயம் அனைத்தும் பேசப்படவில்லை. அல்லது அதற்கு வழிவகை தேடப்படவில்லை என்பது அபத்தமானது. அதிலும் குறிப்பாக போர்க்குற்ற விசாரணை தொடர்பில் மட்டும் 30நிமிடம் தர்க்கித்தோம். 

இதன்போது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடன் இருந்தனர். உண்மை இவ்வாறு இருக்க ஒருவர் அக் கூட்டத்தில்  பங்குகொள்ளாத நிலையில் அவாின்  கருத்தை வைத்து தவறாக திசை திருப்ப முற்படுவது வேடிக்கையானது  என்றார்.