ஐக்கியதேசிய முன்னணி ஆட்சியமைக்க கூட்டமைப்பின் தலமை ஆதரவு, கூட்டமைப்புக்குள் உட்கட்சி மோதல் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
ஐக்கியதேசிய முன்னணி ஆட்சியமைக்க கூட்டமைப்பின் தலமை ஆதரவு, கூட்டமைப்புக்குள் உட்கட்சி மோதல் ஆரம்பம்..

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கம் மீள ஸ்தாபிக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளமைக்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியினர்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறிகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர்  இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஆதரவு வழங்கப்படும் விடயம் ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானிக்கப்பட்டிருக்கவில்லை. எனவும் தெரிவிக்கின்றனர். 

2ம் திகதி கொழும்பில் கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு, மகிந்த ராஜபக்சா யாப்புக்கு விரோதமாக பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பது ஆராயப்பட்டதுடன், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு, அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்னதாகவே அதற்கு ஆதரவளிப்பதாக கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டமையானது, கூட்டமைப்பின் தீர்மானங்களுக்கு விரோதமானது. அத்துடன் மக்களது அபிலாசைகளை பாதிக்கக்கூடியது.

என கட்சியின் செயலாளர் என் . சிறிகாந்தா மற்றும் எம்.கள.சிவாஜிலிங்கம் போன்றோர் தனித்தனியே தெரிவித்துள்ளனர். இதே நேரம் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உட்பட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐ.தே.முன்னணி அரசு அமைந்தால் 

அதற்கு ஆதரவு வழங்க முடியும் என ஜனாதிபதியிடம் வழங்கிய கடிதத்தில் ஒப்பமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு