அடப்பாவிங்களா பயிற்சி ஆட்டத்தை இதுக்குத்தான் நடத்துறீங்களா? ஆஸி அணியின் சூழ்ச்சி!!

ஆசிரியர் - Admin
அடப்பாவிங்களா பயிற்சி ஆட்டத்தை இதுக்குத்தான் நடத்துறீங்களா? ஆஸி அணியின் சூழ்ச்சி!!

கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன் அணி வீரர் நில்சன், இந்திய வீரர்கள் கோபமடைந்தது தங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 

இதில் டி20 தொடரில், இரு அணிகளும் தலா 1 பெற்றன. இதனால் 1-1 என்ற கணக்கில் டி20 தொடர் சமனில் முடிந்தது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6 ஆம் தேதி அடிலைடில் தொடங்க உள்ளது. 

இதற்கு முன்பாக, இந்தியக் கிரிக்கெட் அணி பயிற்சி ஆட்டத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியை பயிற்சி ஆட்டத்தில் எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதன்பின் களமிறங்கிய ஆஸி. அணி, சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. அந்த அணியின் ஹாரி நில்சன் சதமடித்து அசத்தினார். இறுதியாக, ஆஸி. லெவன் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 544 ரன்கள் குவித்தது. 

இதைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி, 2 விக்கெட்கள் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தப் போது, ஆட்டம் டிராவில் முடிவுற்றது. இந்திய அணியில் முரளி விஜய் சதமடித்து அசத்தினார். 

இந்நிலையில், இந்தப் போட்டி குறித்து பேட்டியளித்த ஆஸி வீரர் நில்சன், “இந்திய வீரர்கள் கடுப்பானது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. முதல் டெஸ்ட் போட்டி நெருங்குவதால், ஆஸி டெஸ்ட் அணிக்கு உதவும் வகையில், இந்திய வீரர்களை நீண்ட நேரம் மைதானத்தில் வைத்திருக்க முயற்சித்தோம். 

நாங்கள் எங்கள் வேலையை சரியாக செய்து முடித்திருக்கிறோம் என கருதுகிறேன். இந்திய அணி இதை எதிர்பார்த்திருக்காது. ஆனால், அவர்கள் எங்களை அவுடாக்கி இருந்திருக்கலாம். நாங்கள் டிக்ளேர் செய்யக்கூடாது என முடிவு செய்திருந்தோம். இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை சோர்வடைய செய்ய முயற்சித்தோம். ஆஸி அணி அடிலைட் டெஸ்டில் வெல்ல ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி இருக்கிறோம். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு