SuperTopAds

அணியில் இடம்பிடிக்க ஒரு ஓவரில் 26 ரன்களை விளாசி சதம் அடித்த முரளி விஜய்

ஆசிரியர் - Admin
அணியில் இடம்பிடிக்க ஒரு ஓவரில் 26 ரன்களை விளாசி சதம் அடித்த முரளி விஜய்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முரளி விஜய் ஒரே ஒவரில் 26 ரன்களை விளாசியுள்ளார். 

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 3 டி20 போட்டி தொடர் இந்தியா, ஆஸ்திரேலியா 1-1 வென்றதால் என சமனில் முடிந்தது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா 544 ரன்களை எடுத்தது. 

பின்னர் 2வது இன்னிங்ஸ் ஆடிய இந்தியா 2 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி டிராவில் முடிவடைந்தது.

விக்கெட் கீப்பரை தவிர அனைத்து இந்திய வீரர்களும் பந்து வீசிய அதிசயம் 

ஒரு ஓவரில் 26 ரன்கள் :

இந்த பயிற்சி ஆட்டத்தின் போது தமிழக வீரர் முரளி விஜய், 2வது இன்னிங்ஸின் போது ஜாக் கார்டரின் 39வது ஓவரில் 4, 4, 6, 2, 6, 4 என ஒரே ஓவரில் மொத்தம் 26 ரன்களை குவித்து அதிரடியை வெளிப்படுத்தினார். அதோடு அந்த ஓவரில் அடித்த கடைசி பவுண்டரி மூலம் சதத்தையும் கடந்து அசத்தினார். 

பயிற்சி டெஸ்ட் போட்டியில் வெறும் 27 பந்தில் அரை சதம் விளாசிய முரளி விஜய்

அணியில் இடம்

அண்மையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 டெஸ்டில் விளையாடிய முரளி விஜய் ரன் எடுக்க திணறினார். இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு எதிராகவும் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட வி

ஆஸிக்கு எதிராக பவுலிங் செய்து, விக்கெட் வீழ்த்தியதை நம்ப முடியாமல் சிரித்த கோலி 

இதனால் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் முரளி விஜய் அதிரடியாக சதம் அடித்து தன் திறமையையும், ஃபார்மையும் நிரூபித்துள்ளார்.