SuperTopAds

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகிறது நவீன வசதிகளுடன் கூடிய புதிய ரயில்கள்..

ஆசிரியர் - Editor I
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகிறது நவீன வசதிகளுடன் கூடிய புதிய ரயில்கள்..

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் புதிய ரயில் கப்பலில் ஏற்றப்படுகிறது.

சென்னை ஐ.சி.எப். ரயில்பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ( Class S13 Demu) 13 பெட்டிகள் கொண்ட ரயில் சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு நாளை வரவுள்ளது.

இலங்கைக்கு தலா 13 பெட்டிகளைக் கொண்ட டீசலில் இயங்கும் 6 ரயில்களை இந்திய ரயில்வேயின் பொதுத் துறையைச் சேர்ந்த ரைட்ஸ் நிறுவனம் மூலம் இந்த ரயில்கள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளன.

இந்நிலையில் முதல் கட்டமாக 13 ரயில் பெட்டிகள் கொண்ட ரயில் வியாழக்கிழமை தொழிற்சாலையிலிருந்து சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. இவை எம்.வி.ஐ.பி.ஐ. என்ற சரக்குக் கப்பல் மூலம் நேற்று வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்படுள்ளது.

குளிரூட்டிய 2 பெட்டிகள் ஆசனங்கள் சுற்றக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன, இவற்றின் USB charger, wifi, தனியக இசை கேட்கும் வசதி , எல்.சீ.டி ஸ்கிறீன் தொலைக்காட்சி, தானியங்கி கதவு சிறப்பான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. 

Businessglass 2 பெட்டிகளும், 2 ஆம் வகுப்பிற்கு 7 பெட்டிகளும், இன்ஜின் சாரதிக்கான பெட்டியுடன 2 பெட்டிகள் என 13 பெட்டிகளுடன் ரயில் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 810 பயணிகள் இதில் அமர்ந்து பயணிக்கலாம். உப்பு காற்றால் ஏற்படும் அரிப்பை தடுக்கும் வகையில் இந்த ரயிலின் வெளிப்புறமும், முக்கிய பாகங்களும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. 

1,800 எச்பி மோட்டார் திறன் கொண்ட டீசல் என்ஜின் மூலம் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நன்றி நிருஜன்..