ஐ.தே.கட்சியுடன் இணைந்து விட்டோமா..? நாடாளுமன்றில் எம்.ஏ.சுமந்திரன் காட்டம்.

ஆசிரியர் - Editor I
ஐ.தே.கட்சியுடன் இணைந்து விட்டோமா..? நாடாளுமன்றில் எம்.ஏ.சுமந்திரன் காட்டம்.

ஐ.தே.மு ஆதரவு கொடுப்பது என்றால் நாங்கள் அவர்களுடன் அரசில் சேருவது என்றல்ல இது தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. என த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, 26 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த அரசாங்கம் அமைக்கப்படவேண்டும்.இருக்கிற சூழ்நிலையில் நாட்டின் நன்மை கருதி ஜனாதிபதியால் நியமிக்கப்படவர் தன்னால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் 

அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிறைவேற்றிய தருணத்தில் அதற்கு முன்னதான நிலையில் ஐ.தே.மு.அமையுங்கள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை காட்டக்கூடிய ஐ.தே.மு.உடைய நியமிக்ககூடிய ஒருவரை 

நியமியுங்கள் அந்த செயற்பாட்டுக்கு நாங்கள் ஆதரவளிப்போம் என சொல்லியுள்ளோம் .நாட்டில் உள்ள ஸ்திரத்தன்மை குழப்பம் மாறவேண்டும் என்பதற்காக பொறுப்பான பிரதான எதிர்கட்சியாக நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கை இது. 

இதை எவ்விதமாக பலர் விமர்சித்தாலும் இதுதான் எங்கள் நிலைப்பாடு என சபையில் உரையாற்றினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு