வெண்கல கிண்ணம் கூட கிடையாது… வெறும் கையுடன் நாடு திரும்புகிறது இலங்கை !!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி.20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி தனது வழக்கமான சொதப்பல் பேட்டிங் மூலம் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்திய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா(27), ஸ்ரேயஸ் ஐயர்(30), மணிஷ் பாண்டே(32) மற்றும் தினேஷ் கார்த்திக் 18* ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் 19.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி 139 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரையும் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.