"காஜா" புயல் தாக்கத்தினால் யாழ்.மாவட்டத்தில் பலத்த காற்றும் வீசுவதுடன் மழையும் பெய்து கொண்டிருக்கிறது

ஆசிரியர் - Admin

குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் தீவுப்பகுதிகளில் பலத்த காற்று வீசுவதாகவும் அதேபோல் காங்கேசந்துறை, பலாலி பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் நிலையில் மக்கள் முன்னதாகவே ஒழுங்கமைக்கப்பட்ட பாதுகாப்பாப இடங்களில் ஒதுங்கி வருவதாகவும் கூறப்படுகிறது..

கஜா சூறாவளியின் தாக்கங்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை - மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் செல்ல வேண்டாமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

வடக்கின் கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பான பிரதேசங்களை நாட வேண்டுமென இடர்காப்பு முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப்கொடிப்பிலி தெரிவித்துள்ளார். 

சில சமயங்களில் மரங்களும் மின்கம்பங்களும் முறிந்து விழலாம். இது குறித்து அவதானம் தேவை. தொலைபேசி ஊடாக அவசர உதவிகளைப் பெறலாம் இதற்காக அழைக்க வேண்டிய இலக்கம் 117 என்பதாகும் என திரு.கொடிப்பிலி தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு