கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய சர்கார் படக்குழு

ஆசிரியர் - Admin
கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய சர்கார் படக்குழு

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ படத்தின் வெற்றியை சர்கார் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

நடிகர் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘சர்கார்’. சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த நவம்பர் 6 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, இப்படத்தில் ஆளும் அதிமுக கட்சியின் இலவசத் திட்டங்களை விமர்சித்துள்ளதாகவும், ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தியதாகவும் அதிமுக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, அதிமுக தொண்டர்கள் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டு, பேனர்களை கிழித்து வன்முறை செய்தனர். மேலும், நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது அதிமுகவினர் காவல்நிலையத்தில் வழக்குப் போட்டனர். இதன் பின்னர் ஆளும் கட்சியின் அழுத்தம் காரணமாக, சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்கியது

இந்நிலையில், சர்கார் படத்தின் படக்குழுவினர் படத்தின் வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு