வியாழேந்திரனுக்கு இனி கூட்டமைப்புக்குள் இடமில்லை. காட்டமாக கூறியுள்ளாா் மாவை சோ.சேனாதிராஜா..

ஆசிரியர் - Editor I
வியாழேந்திரனுக்கு இனி கூட்டமைப்புக்குள் இடமில்லை. காட்டமாக கூறியுள்ளாா் மாவை சோ.சேனாதிராஜா..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மஹிந்த ராஜபக்ஸ பக்கம் தாவியுள்ள வியாழேந்திர னுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்புக்குள் இனி ஒருபோதும் இடமில்லை.

மேற்கண்டவாறு தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா கூறியுள் ளாா். 

யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்திலுள்ள அவரது வீட்டில் இன்று காலை ஊடகங்களைச் சந்தித்த்து மாவை சேனாதிராசா கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழேந்திரன் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். 

கடந்த மூன்று வருடங்களாக கூட்டமைப்பின் உறுப்பினராகச் செயற்பட்டு வந்த வியாழேந்திரன் அண்மையில் கட்சி தாவி அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெற்றிருக்கின்றார்.

இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ள கூட்டமைப்பு அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

இதற்கமைய அவரை கூட்டமைப்பிற்குள் கொண்டு வந்த புளொட் அமைப்பு அவரை தனது கட்சியிலிருந்து நீக்க உள்ளதாகவும் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்றும் தமிழரசுக் கட்சியிடம் கோரியுள்ளது.

இதற்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் பிரதி அமைச்சர் பதவியை வியாழேந்திரன் இராஜினாமா செய்துவிட்டு மீளவும் கூட்டமைப்பிற்குள் இணைந்து கொள்ள வேண்டும் 

என தமிழரசுக் கட்சியின் செயலாளர் அறிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இது விடயம் தொடர்பில் மாவை சேனாதிராசாவிடம் கேட்ட போது எ

மது கட்சியிலிருந்து அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெற்றுள்ள வியாழேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

அவ்வாறு நடவடிக்கை எடுக்கின்ற போது அவருடைய பதவியையே அவர் இழக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படலாம்.  ஆகவே அவர் திரும்பி வருவது அல்லது அவரை இணைத்துக் கொள்ளவது என்ற பேச்சிற்கே இடமில்லை. 

அவ்வாறு அவர் திரும்பி வந்தால் இணைத்துக் கொள்வதென யாரேனும் கூறியிருந்தால் அது தவறு. அவர் வந்தாலும் வரவிட்டாலும் அவரை கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப் போவதில்லை 

என மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு