தீபாவளி திருநாள் தீய சக்திகளை தோற்கடித்து உண்மையை நிலைநாட்டட்டும்.. தீபாவளி வாழ்த்து செய்தியில் இரா.சம்மந்தன்..

ஆசிரியர் - Editor
தீபாவளி திருநாள் தீய சக்திகளை தோற்கடித்து உண்மையை நிலைநாட்டட்டும்.. தீபாவளி வாழ்த்து செய்தியில் இரா.சம்மந்தன்..

“இந்தத் தீபத்திருநாளானது தீயசக்திகளை முறியடித்து உண்மையும் நீதியும் நிலைநாட்டப்படுகின்ற ஒரு நாளாக அமையட்டும்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கைவாழ் அனைத்து மக்களுக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

எமது மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் அபிலாஷைகள் என்பன பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ள இந்தச் சூழ்நிலையில், 

இந்தத் தீபத்திருநாளானது தீயசக்திகளை முறியடித்து உண்மையும் நீதியும் நிலைநாட்டப்படுகின்ற ஒரு நாளாக அமைவதோடு, எமது மக்கள் நிரந்தரமான சமாதானத்தையும் உண்மையான சுதந்திரத்தையும் அடைய இந்நன்னாளில் பிரார்த்தனை செய்கின்றேன்.

எமது மக்களின் அன்றாட வாழ்க்கையில் காணப்படும் இடர்கள் நீங்கி வளம் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக.

எமது மக்களும் இந்த நாடும் ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி முன்னேற இந்த நன்னாளில் இறைஞ்சுவோமாக!” – என்றுள்ளது.

Radio
×