கஜேந்திரகுமாா் என்ன சொல்கிறாா்..? அவாிடம் இருக்கும் திட்டம்தான் என்ன..? அப்பாவியாக கேட்கிறாா் சித்தா்.

ஆசிரியர் - Editor I
கஜேந்திரகுமாா் என்ன சொல்கிறாா்..? அவாிடம் இருக்கும் திட்டம்தான் என்ன..? அப்பாவியாக கேட்கிறாா் சித்தா்.

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து எம்மை வெளியேற்ற வேண்டும் என கஜேந்திரகுமார் கோரியுள்ளார் என அறிந்து கொண்டோம். அவர் என்ன செய்ய போகிறார் என ஏன் இன்னும் மக்களுக்கு சொல்லவில்லை. ஊடகவியலாளர்களுக்கும் எதுவும் சொல்லி இருக்க மாட்டார் என நினைக்கிறேன். 

மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் த.சித்தாா்த்தன் கூறியுள்ளாா். சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று அவருடைய இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின்போதே அவா் மேற்கண்டவா று கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

 ஏனைய கட்சிகளை , மர்ரைவர்களை விமர்சிப்பதன் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்று கொடுக்கலாம் எனவோ தனது அரசியலை முன்னெடுக்கலாம் எனவோ நினைப்பது தவறு. 

தமிழ் மக்களுக்கு அவர் என்ன செய்ய போகிறார். அஹிம்சை ரீதியாக போராட போகிறாரா ? அல்லது ஆயுத ரீதியாக போராட போகிறாரா ? அல்லது தொடர்ந்து ஏனையவர்களை விமர்சித்துக்கொண்டு தான் இருக்க போகின்றாரா ?

மக்கள் அவர்களுக்கும் வாக்களித்து உள்ளனர். அவ்வாறு வாக்களித்த மக்களுக்கு தாம் என்ன செய்ய போகின்றோம் என்பது பற்றி எதனையும் கூறாமல் மற்றவர்களை தொடர்ந்து குறை கூறிக்கொண்டும் விமர்சித்தும் கொண்டு இருப்பது அவருடைய எதிர்காலத்திற்கு நல்லதல்ல. 

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து எம்மை வெளியேறுமாறு தமிழ் மக்கள் பேரவையை சேர்ந்த எவரும் எம்மை கோரவில்லை. கடந்த காலத்தில் தமிழ் மக்கள் பேரவையால் முன்னேடுக்கப்பட்ட எழுக தமிழுக்கு நாம் பூரண ஆதரவு அளித்திருந்தோம். எனவே பேரவை என்பது ஒரு கட்சியல்ல அது பல கட்சிகளின் கூட்டு என மேலும்  தெரிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு