வியாழேந்திரன் செய்த துரோகத்திற்கு மட்டக்களப்பு மக்களிடம் மன்னிப்பு கேட்டது தமிழ்தேசிய கூட்டமைப்பு..
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் இழைத்த துரோகத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்களிடம் கூட்டமைப்பின் சார்பில் மன்னிப்பு கோருகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
தற்போதைய அரசியல் நெருக்கடியில் இருந்து தப்பிப் பிழைக்கும் நோக்கில் ஏனைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு மைத்திரி அரசு விரிக்கும் வலைக்குள் சிக்குண்டு விலைபோன இந்த நாடாளுமன்ற உறுப்பினரை புளட் அமைப்பின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளராக நிறுத்தியிருந்தோம்.
எமது கட்சியின் நீண்ட போராட்ட வரலாற்றின்பால் நம்பி வாக்களித்த மட்டக்களப்பு மக்களிற்கு துரோகம் இழைத்து வெளியேறி அமைச்சர் வாழ்விற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினரிற்காக மாவட்ட மக்களிடம் மன்னிப்பு கோருகின்றோம்.
அதேநேரம் அந்த மாவட்டத்திலே நெஞ்சுறுதி கொண்ட எமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அளப்பரும் சேவையினை வழங்குவார்கள் . ஜனாதிபதி மகிந்தவின் கொடுமையை போக்க மகிந்தவிற்கு வாக்களிக்குமாறு கோரிய நிலையில் இன்று அவரே தனது கட்சிப் பதவிக்காக எமது கட்சியை அழிக்க துணிந்துவிட்டதனையே இச் செயல் எடுத்துக் காட்டியுள்ளது.
இவற்றிற்கு மக்களும் வரலாறும் பாடம் சொல்லும். ஏனெனில் தமிழ் மக்கள் தாம் பட்ட அவலத்தினை மன்னிக்க பழகுவார்களே அன்றி என்றுமே மறக்க மாட்டார்கள் என்பதே யதார்த்தம். இவ்வாறான செயல்களையே நான் கடந்த காலங்களில் போலித் தேசியம் பேசுபவர்கள் என விமர்சித்து வந்தேன்.
அந்த நிலையில் என் மீது கோபம் ஏற்பட்டிருக்கலாம் . ஆனாலும் என்றைக்கும் தமிழ் மக்களிற்கும் கட்சிக்கும் என்றைக்குமே அநீீீதி இழைைக்கவோ , பதவிக்கு ஆசைப்பட்டவர்களைக்கொண்டவர்களை எமது மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்றார்.