வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களம் இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ள எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor
வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களம் இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ள எச்சரிக்கை..

நவம்பர் 03ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது மேலும் விருத்தியடைந்து இலங்கையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். 

நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது 

ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது 

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் (குறிப்பாக கேகாலை, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களில்) சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Radio
×