தல அஜித்தின் அடுத்த படம் இவா் இசையமைத்தால் சிறப்பு. ரசிகா்கள் எதிா்பாா்ப்பு..

ஆசிரியர் - Editor
தல அஜித்தின் அடுத்த படம் இவா் இசையமைத்தால் சிறப்பு. ரசிகா்கள் எதிா்பாா்ப்பு..

அஜித் விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வரும் ஜனவரி 2019 ல் ரிலீஸாகவுள்ளது. இதற்கான வேலைகள் முனைப்புடன் நடந்து வருகின்றன.

இந்நிலையில் அவரின் அடுத்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இளம் இயக்குனர் வினோத்துடன் தான் என தகவல் வந்துவிட்டது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் இப்படத்தை தயாரிக்கிறார்.

மேலும் இப்படத்தில் யுவன் அல்லது ரஹ்மான் இசையமைக்கூடும் என சொல்லப்பட்டது. ஒரு வேளை ரஹ்மான் இணைந்தால் அவரின் 2006 ல் வந்த வரலாறு படத்திற்கு பின் 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணைவதாக இருக்கும். கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் படத்திற்கும் ரஹ்மான் தான் இசையமைத்தார்

அதேவேளை யுவன் இசையமைத்தால் 2012 பில்லா படத்திற்கு 6 வருடங்கள் கழித்து அமையும் கூட்டணியாக இருக்கும். மேலும் இவர்களின் கூட்டணியில் வரும் 7 வது படம் என்றும் சொல்லலாம்.

Ads
Radio
×