விஜயின் சர்கார் உலகளவில் அதிக நாடுகளில் ரிலீசாகும்

ஆசிரியர் - Admin
விஜயின் சர்கார் உலகளவில் அதிக நாடுகளில் ரிலீசாகும்

நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் உள் ளிட்டோர் நடித்துள்ள சூசர்கார்’ என்ற திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற நவம்பர் 6ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம், சுமார் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உலகமெங்கும் சுமார் 80 நாடுகளில் வெளியாக இருக்கிறது. 

ஏ பி குரூப்ஸ் மற்றும் டி ஃபோக்கஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மெக்சிகோ, போலந்து, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, ரஷ்யா மற்றும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் படத்தை வெளியிடுகின்றன. தமிழ், தெலுங்கிலும் படம் அதிக திரையரங்குகளில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையெ இந்த படத்துக்கு எதிராகவும், படத்தை வெளியிட தடை கேட்டும் வழக்கு தொடரப்பட்டது. சர்கார் படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும், சர்கார் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கிடையே இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சர்கார் படத்தின் கதை தன்னுடையது தான் என்றும், ஒரு கதையின் கரு ஒரே மாதிரியாக பலருக்கு தோன்றியிருக்கலாம். ஆனால் திரைக்கதை தான் முக்கியம். அதில் ஒற்றுமை இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Radio
×