SuperTopAds

ஐனாதிபதியின் உத்தரவையும் மீறி 2ம் திகதி நாடாளுமன்றத்தை கூட்ட தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
ஐனாதிபதியின் உத்தரவையும் மீறி 2ம் திகதி நாடாளுமன்றத்தை கூட்ட தீர்மானம்..

ஐனாதிபதியின் உத்தரவையும் மீறி எதிர்வரும் 2ம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டு வதற்கு சபாநாயகர் தீர்மானம் எடுத்துள்ளதுடன், த னது தீர்மானத்தை ஐனாதிபதி மைத்திரிபால சிறி சேனாவுக்கு வழங்கியுள்ளார்.

சபாநாயகர் தலைமையில் இன்று நண்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 126 எம்.பிக்கள் கையொப்பமிட்டு தன்னிடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளனர் எனவும், எனவே, 

இலங்கை அரசியல் சட்டத்தின் பிரகாரம் தன்னால் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும் எனவும், இது தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தான் இன்று அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார் என்று மனோ கணேசன் மேலும் கூறினார்.