சிறுவர்களாலும் நம்ப முடியாத கதைகளை ஐனாதிபதி கூறுகிறார்.. ரணில் விசேட உரை..

ஆசிரியர் - Editor I
சிறுவர்களாலும் நம்ப முடியாத கதைகளை ஐனாதிபதி கூறுகிறார்.. ரணில் விசேட உரை..

அரசியலமைப்புக்கு முரணான சர்வா திகார ஆட்சியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. என கூறியி ருக்கும் முன்னாள் பிரதமர் ரணில் வி க்கிரமசிங்க இலங்கையில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு நாடாளும ன்றத்திலேயே தீர்வு உள்ளதெனவும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் கூறி யுள்ளார்.

அலரிமாளிகையில் இன்று (29) மாலை இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மனித உரிமைகளை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

நேற்று (28) மாலை ஜனாதிபதி மேற்கொண்ட விஷேட உரையில் தனக்கும் அமைச்சரவைக்கும் குற்றம் சுமத்தியதாகவும், 19 ஆவது சீர்திருதத்தின் அடிப்படையில் நாட்டில் நிறைவேற்று அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பிரதமர் ஒருவரை தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பு சீர்திருத்தின் 42(4) சரத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வெல்லக்கூடிய அமைச்சரே நியமிக்கப்பட வேண்டும் எனவும் இருப்பினும் மஹிந்த ராஜபக்ஷவின் நியமனம் அரசியலமைபிற்கு முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி, சிறு பிள்ளைகளால் கூட நம்ப முடியாத கருத்துக்களை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளை காணக்கூடியதாக இருக்கவில்லை எனவும் அரச ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் மூலம், ஊடக சுதந்திரத்தை கண்டுகொள்ள முடியுமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தற்போது ஏற்பட்டுள்ள நிலமைக்கு பாராளுமன்றத்திலேயே தீர்வு உள்ளதாகவும், அதனால் உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பிற்கு முரணான, சர்வாதிகார ஆட்சியை எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதிக்க முடியாது எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு