நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுங்கள், சபாநாயகருக்கு சம்மந்தன் கடிதம்..
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கான ந டவடிக்கைகளை எடுங்கள் என எதிர்க்கட்சி தலைவ ர் இரா.சம்மந்தன் நாடாளுமன்ற சபாநாயகர் கருஐ யசூரியவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சபாநாயகருக்கு அவசர கடிதம் ஒன்றை இன்று மாலை அனுப்பியுள்ளார்.
“இலங்கை அரசமைப்பின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்து, ஜனநாயக ரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய
அதியுயர் சபையான நாடாளுமன்றத்தின் மேலாதிக்கத்தை அங்கீகரித்து சட்டங்களுக்கு அமைவாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு உங்களிடம் கோருகின்றேன். அதன் சட்டபூர்வமான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த இது உதவும்” – என்று அந்தக் கடிதத்தில் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.