சுருக்குவலை பயன்படுத்தி மீன்பிடித்த 11 மீனவா்களுக்கு 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது முல்லை நீதிமன்றம்.
முல்லைத்தீவு கடற்பரப்பில் சுருக்குவலை பயன்படுத்தி மீன்பிடித்த திருகோணமலை மீனவர்கள் 11 பேருக்கும் 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபா குற்றப் பணம் விதித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முல்லைத்தீவுக் கடலில் தடை செய்யப்பட்ட மின்பிடி முறையான சுருக்குவலை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஓர் படகும் 7 மீனவர்களையும் கைது செய்த திணைக்களத்தினர் இவர்களிற்கு உதவியாக இரு படகுகளில் பயணித்த 4 பேரையும் சேர்ந்து 11 மேரையும் கைது செய்து கடந்ந 10ம் திகதி நீதி மன்றில் முற்படுத்தப்பட்டவேளையில் 11 பேரும் கடந்த 25ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த 11 பேரில் ஒரே படகில் பயணித்த 7பேர் தொடர்பிலும் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டதான குற்றச் சாட்டினை சான்னுப் பொருட்களுடன் முன்வைத்ததோடு ஏனைய நால்வரும் இவ்வாறு சுருக்கு வலையில் பிடிக்கும் மீன்களை ஏற்றி வருவதற்காக உதவிக்கு பயணித்த நிலையில் பதிவு ஆவணங்கள் அற்ற படகில் பயணித்த குற்றப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவற்றினை ஆராய்ந்த மன்று ஓரே படகில் பயணித்த ஏழு பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா வீதம் குற்றப் பணம் விதித்ததோடு ஏனைய நால்வருக்கும் தலா 30 ஆயிரம் ரூபா வீதம் மொத்தமாக 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபா குற்றப்பணம் விதித்து நீதிபதி லெனின்குமார் தீர்ப்பளித்த நிலையில் படகு தொடர்பான வழக்கு விசாரணைக்காக நவம்பர் 29ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.