வடகிழக்கில் மீண்டும் ஆயுத போராட்டம் வரக்கூடாது என்பதற்காகத்தான் கட்சி ஆரம்பித்தாரம் அனந்தி..

ஆசிரியர் - Editor I
வடகிழக்கில் மீண்டும் ஆயுத போராட்டம் வரக்கூடாது என்பதற்காகத்தான் கட்சி ஆரம்பித்தாரம் அனந்தி..

ஆயுதக் கலாச்சாரத்தை ஒழிக்கும் நோக்கிலேயே கட்சி ஒன்றை ஆரம்பிப்பதாக அனந்தி சசிதரன்  தெரிவித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ண ஜீவன் எச் கூல் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது பதிவில் உள்ள 70 அரசியல் கட்சியின் பெயர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் பதிவு செய்யப்படவில்லை.

தேர்தல் திணைக்களமானது 2015ம் ஆண்டின் 19ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஆணைக்குழுவாக அங்கீகரிக்கப்பட்டதோடு புதிய கட்சிகளை அனுமதிக்கும் அதிகாரமும் ஆணைக்குழுவிடம் மட்டுமே உள்ளது. 

அதன் பிரகாரம் ஆணைக்குழுவின் அங்கத்தவர் என்ற வகையில் புதிய கட்சியை பதிவு செய்வதற்கு  மாதக்கணக்கான  வழிமுறையே உள்ளது. இதேநேரம் கடந்த இரு மாதங்களிற்கு முன்னர் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தனது மகளுடன் ஆணைக்குழுவிற்கு சமூகமளித்து 

கட்சி ஒன்றை பதிவு செய்வதற்கான வழி முறைகள் தொடர்பில் கேட்டிருந்தார். அதன்போது உடனடியாக பதிவு செய்ய முடியாது.எனக் கூறியதோடு அதற்கான சட்ட ஏற்பாடு தொடர்பான புத்தகத்தையும் ஆணைக்குழு வழங்கியிருந்த்து. 

இதன்போது ஆயுதக் கலாச்சாரத்தை ஒழிக்கும் நோக்கிலேயே கட்சி ஒன்றை ஆரம்பிப்பதாக தெரிவித்து தவிசாளருடன் இணைந்து புகைப்படம் எடுத்து நன்றிகூறிச் சென்றார். எனத் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு