ஒரு கோடி 74 லட்சம் மோசடி.. நீதிபதி ம.இளஞ்செழியன் கொடுத்த அதிரடி தீர்ப்பு..
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற ஒரு கோடியே 74 இலட்சம் ரூபா பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் அச் சபையின் திருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு
மோசடி செய்யப்பட்ட பணத்தின் மூன்று மடங்ககாக 5 கோடியே 22 இலட்சம் ரூபா பணத்தை மீள செலுத்தவும், குற்றவாளிக்கு பத்தாண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து திருகோணமலை மேல். நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் குறித்த தண்டப் பணத்தை அறவீடு செய்யும் வகையில் குற்றவாளியின் அசையும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்தும், குற்றச் சம்பவம் நடந்த தினத்திலிருந்து குற்றவாளியின் சொத்துக்கள் உரிமை மாற்றப்பட்டிருப்பின்
அவற்றையும் பறிமுதல் செய்து அனைத்தையும் பகிரங்க ஏலத்தில் விற்பனை அதன் மூலம் அப் பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் இன்றைய தினம் அரசுக்கு ஆணை பிறப்பித்து தீர்பளித்துள்ளார்.
இதேவேளை குறித்த குற்றச் சம்பவமானது கடந்த 2003ஆம் ஆண்டு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் சுமார் 15ஆண்டுகளின் பின்னர் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
திருகோணமலை மேல் நீதிமன்றில் இடம்பெற்ற இவ் வழக்கு விசாரணையை பிரதி சொலிஸ்ட ஜென்றல் குமார்ரட்ணம் நெறிப்படுத்தியிருந்தார்.