தமிழீழ விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட அழைப்பிதழ்களால் அதிர்ச்சி..
தமிழீழ விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கப்ப ட்ட அழைப்பிதழ்கள் விநியோகிக்கப்பட்டமை யாழ். மாவட்டத்தில் பலத்த சந்தேகங்களை உருவாக்கியு ள்ளது.
மேலும், தமிழ் மக்கள் பேரவையின் நிகழ்வு நாளை மறுதினம் யாழ்.நல்லூர் பகுதியில் இடம்பெறவுள் ளது. இந் நிலையில் தமிழீழ விடுதலைக் புலிகளின் புலிச் சின்னத்துடன் பலருக்கும் அழைப்புகள் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மாபெரும் எழுச்சி தலைவன் வழியில் மக்கள் மேலவைத் தலைவன் கைகளைப் பலப்படுத்துவோம் எனக் குறிப்பிடப்பட்டு தமிழ் மக்கள் பேரவையால்
புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட அழைப்பிதழ் துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டிருக்கின்றமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதேவேளை தமிழ் மக்கள் பேரவையின் கூட்டமும் முதலமைச்சர்விக்கினேஸ்வரனின் அரசியல் பிரவேச அடுத்த கட்ட அறிவிப்பும் நாளை மறுதினம்
புதன்கிழமை யாழ். நகரிலுள்ள மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு தமிழ் மக்கள் பேரவையால்
பலருக்கும் விடுக்கப்பட்ட இருக்கும் நிலையிலேயே நாம்மூவர் அழைப்புதழும் அனுப்பப்பட்டுருக்கின்றமை பலத்த சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.