இலங்கையின் 9 மாகாணங்கள் குறித்து ஐனாதிபதி கலந்துரையாடல், வடக்கு முதல்வருக்கும் அழைப்பு..

ஆசிரியர் - Editor I
இலங்கையின் 9 மாகாணங்கள் குறித்து ஐனாதிபதி கலந்துரையாடல், வடக்கு முதல்வருக்கும் அழைப்பு..

மாகாணங்களின் நிதி நிலமை மற்றும் எதிர்காலத் திட்டமிடல் தொடர்பில் ஆராயும் நோக்கில்  சகல  ஆளுநர்கள் , பிரதம செயலாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா சந்திக்கும் கலந்துரையாடலிற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் அழைக்கப்பட்டுள்ளார்.

பல மாகாண சபைகளின் ஆயுட்காலம்  நிறைவடைந்த நிலையிலும் வடக்கு மாகாணம் உட்பட மேலும் பல சபைகளின் ஆயுட்காலமும் நிறைவடையும். நிலையில். மாகாணத்தில் திட்டமிடப்பட்ட திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் நடப்பாண்டில் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படும் திட்டங்களிற்கான கட்டு நிதிகளை விடுவிப்பது தொடர்பிலும் மேற்படி கலந்துரையாடல்  இடம்பெறவுள்ளது.

இதேநேரம் குறித்த சபைகள். வினைத்திறனுடன் எதிர்காலத்தில் செயல்படுவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பிலுமே குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 ஜனாதிபதி மாளிகையில் நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் மேற்படி கலந்துரையாடலிற்கு வடக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதி செயலகத்தினால் அழைக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம் வடக்கு  மாகாண சபையின் ஆயுட்காலம் 24ம் திகதியுடன் முடிவடையும் நிலையிலும் நாளைய தினம் வடக்கு மாகாண திணைக்களங்களங்கள் அமைச்சுக்களின் அதிகாரிகளை முதலமைச்சர் விருந்து அழைத்துள்ள நிலையில் ஜனாதிபதியின் சந்திப்பில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. எனத் தெரிய வருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு