SuperTopAds

அரசியல் கைதிகள் விடுதலை தொடா்பில் அரசுடன் பேச்சு, 6 கோாிக்கைகளை முன்வைத்துள்ள த.தே.கூட்டமைப்பு..

ஆசிரியர் - Editor I
அரசியல் கைதிகள் விடுதலை தொடா்பில் அரசுடன் பேச்சு, 6 கோாிக்கைகளை முன்வைத்துள்ள த.தே.கூட்டமைப்பு..

தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஅவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசியகூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான திரு.இரா. சம்பந்தன் தலைமையில் இன்று சந்தித்து உரையாடினார்கள். 

இப்பேச்சுவார்த்தையின் போது கூறப்பட்ட விடயங்கள்பின்வருமாறு,

1.      அரசியல் கைதிகளின் விடயம் சட்ட ரீதியாக மாத்திரம்பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல.இது தமிழ் தேசிய பிரச்சினையுடன் தொடர்புடையவிடயம்.ஆதலால் இது அரசியல் ரீதியாக எதிர்நோக்கப்பட வேண்டும்.இதுவரையில் இதுஅரசியல் ரீதியாக அணுகப்பட்டிருக்கவில்லை. அரசியல் ரீதியாக அணுகப்படவேண்டும் எனநாம் வலியுறுத்தினோம்

 2.      யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள்கடந்து விட்டன. யுத்தம் முடிவடைந்தவுடன் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. அரசியல் கைதிகள் நீண்டகாலமாகசிறையில் இருக்கிறார்கள்.

அவர்களை தொடர்ந்து சிறையில் தடுத்து வைத்திருப்பதுமனிதாபிமானமற்றது. அவர்களுக்கு எதிராக தாமதம் இல்லாமல் தண்டனை வழங்கியிருந்தால்தற்போது தண்டனைக்காலம் நிறைவேறி வெளியே வந்திருப்பார்கள்

3.      இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு பலருக்கு பயங்கரவாததடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலமே அவர்களுக்கெதிரான சாட்சியமாக இருக்கிறது. 

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு புதிய சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. இப்புதிய சட்டத்தில்குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் சாடசியமாக முடியாது. இந்த சூழலில் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

4.      1971ம் ஆண்டும் 88,89,ம் ஆண்டுகளிலும் மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்தவர்கள்அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிய பலர் விடுவிக்கப்பட்டார்கள். யுத்தம்முடிவடைந்த பின்பு முன்னைய அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி அரசுக்கு எதிராகஆயுதமேந்தி போராடிய 12 ஆயிரம் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு 

விடுவிக்கப்பட்டார்கள். ஆகையால் இந்த கைதிகளை தொடர்ந்துசிறையில் அடைத்து வைத்திருப்பது நியாயமற்றது அவர்களும் விடுவிக்கப்படவேண்டும்என்றும் வலியுறுத்தப்பட்டது.

5.      சிறைக்கைதிகள் சிறையில் உண்ணாவிரதம் இருந்து போராட்டங்களைநடத்தியிருக்கிறார்கள். எமது வேண்டுகோளுக்கு இணங்க அந்தப் போராட்டத்தை தற்காலிகமாகநிறுத்தியுளார்கள்.பொது அமைப்புக்களும்,மக்களும்,பல்கலைக்கழக மாணவர்களும் பலவித போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 

இவையெல்லாம் தமிழ் மக்களுடைய உணர்வுகளை பிரதிபலிக்கின்றன.

6.      தமிழ் மக்களின் கருத்து, கைதிகள் தமிழர்களாகஇருக்கிற காரணத்தினால்தான்,அரசு போதிய அக்கறைசெலுத்தாமல் இருக்கிறது என்பதாகும்.இது நல்லிணக்கதிற்கு பாதகமானது என்பதனையும்நாம் வலியுறுத்தினோம்.

இவை அனைத்தையும்  கேட்டு ஜனாதிபதிஅவர்கள் வருகிற வாரம் பிரதம மந்திரி, சட்டமா அதிபர், மற்றும் தேவையான அனைவரையும் அழைத்து இந்த விடயத்தை சாதகமாகஅணுகி கைதிகளின் விடுதலையை  எவ்விதமானமுறையில் நிறைவேற்றலாம் என்பதை முடிவு செய்வதாக தெரிவித்தார்

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவு சேனாதிராஜா , செல்வம் அடைக்கலநாதன்,எம். ஏசுமந்திரன் வைத்தியர் எஸ்.சிவமோகன் மற்றும் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.