அரச வாகனத்தில் மதுபானம் கொண்டு சென்றவர்களுக்கு எடுத்த நடவடிக்கை என்ன..?
குடந்த வாரம் வடபிராந்திய போக்குவரத்து சபையின் வாகனம் ஒன்றில் இருந்து 24 வெளிநாட்டு மதுபானப்போத்தல்கள் எடுத்து சென்ற சம்பவம் தொடர்பில் குறித்த வாகனத்தின் சாரதி மற்றும் அதன் ஊழியர்கள் மல்லாகம் மதுவரி நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அரச வாகனத்தில் இவ்வாறு மதுபானப்போத்தல்களை எடுத்து சென்ற பயிற்ச்சி பாடசாலை மீது அதிகாரிகள் மீது வடபிராந்திய தலமைக்காரியாலத்தினால் ஏன் ஓழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என ஊழியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சிறு தவறு செய்தால் பணி நீக்கம் செய்வதோடு, தற்காலிக வேலைத்தடையும் விதிக்கும் நிர்வாகனம் இவ்வாறு அரச வாகனத்தின் முறையற்ற விதத்தில் மதுபானப்போத்தல்களை எடுத்து சென்ற உயர் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ஊழியர்கள் விசனம் கூறுகின்றனர்.
இவர்கள் மீது ஓழுக்காற்று நடவடிக்கை எடுக்க தவறின் தொழில் சங்கபோராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.