விவசாயத்திற்கான நீர் பாய்ச்சும் குளத்தில் உவர் மண்ணை போட்டு குளத்தை மூடும் இராணுவம்..

ஆசிரியர் - Editor I
விவசாயத்திற்கான நீர் பாய்ச்சும் குளத்தில் உவர் மண்ணை போட்டு குளத்தை மூடும் இராணுவம்..

கிளிநொச்சி மாவட்டம் அரசபுரம் குளத்தின் ஒரு பகுதியில் மண்டைக்கல்லாறில் இருந்து பெறப்படும் உப்பு மண் கொண்டு குளத்தின்  பெரும்பகுதியை இராணுவம் நிரவுவதாக  விவசாயிகள் பலர் கவலை தெரிவிக்கின்றனர். 

பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அரசபுரம் குளத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினர் அதன் அருகே தடுப்பு வேலி காவலரண்கள் அமைத்து நிலைகொண்டுள்ளனர். 

இவ்வாறு நிலைகொண்டுள்ள நிராணுவத்தினர் கடந்த சில நாட்களாக மண்டைக்கல்லாறில் இருந்து அகழப்படும் உவர் மண்ணை ஏற்றிவந்து குளத்தில் கொட்டுகின்றனர். 

இவ்வாறு கொட்டப்படுவதன் காரணம் இதுவரை தெரியாதபோதிலும் அதிக மண் கொட்டப்படுவதனால் குளத்தின் பெரும் பகுதி மூடப்படும் அபாயமும் உள்ளது.

இதேநேரம் இக்புளத்தை மேலும் ஆழப்படுத்தி புனரமைத்து தருமாறு நீண்டகாலமாக நாம் கமநல சேவைத் திணைக்களத்தினர் விடுத்த கோரிக்கையின் பயணாக தற்போது நிதி அனுமதிக்கப்பட்டு ஒப்பந்தமும் 

வழங்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் இராணுவத்தினர் இவ்வாறு மண்ணை கொட்டினால் எவ்வாறு பணி இடம்பெறும் . 

இவ்வாறு இங்கே குந்தியிருக்கும் படையினர் எமது வாழ்வாதாரத்தை அழித்து தமது கொகுசு வாழ்வையே தேடுகின்றனர். என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறு விவசாயிகளின் கருத்து தொடர்பில் மாவட்ட கமநல சேவைத் திணைக்கள உதவி ஆணையாளர் ஆயகுலனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

மேற்படி குளம் எதிர்வரும் வாரம் எம்மால் புனரமைக்கப்படவுள்ளது. இருப்பினும் அதற்குள் மண்ணை கொட்டுவதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. 

எம்மிடம் தொடர்புகொள்ளவும் இல்லை.்இருப்பினும் அது தொடர்பில் உடன் கவனம் செலுத்தப்படும். என்றார. இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் சு.அருமைநாயகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது 

விவசாயிகளின் வாழ்வாதாரக் புளத்தின் அருகில் உவர்மண்ணை கொட்ட முடியாது. அது வயல் நிலங்களைப் பாதிக்கும்.்அத்துடன் இது என்ன தேவைக்காக பொண்டப்படுகின்றது. 

என்பது தொடர்பிலும் தெரியப்படுத்தப்படவில்லை. எனவே உடனடியாக இராணுவ உயர் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு