அரசியல் கைதிகள் விடயத்தில் உருட்டு பிரட்டு விடும் மாவை சேனாதிராஜா..
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி நடந்து சென்ற மாணவர்களின் உணர்வுகளை இழிவு செய்யும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா இரு பொய்களை கூறியுள்ளார்.
கடந்த 30 நாட்களாக தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நடாத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்.மாவட்டத்திலிருந்து நடந்து அனுராதபுரம் மாவட்டத்தி ற்கு செல்லும் நடைபவனியை கடந்த 9ம் திகதி ஆரம்பித்தனர்.
இந்த நடைபவனி இன்று அனுராதபுரம் சிறைச்சாலையை சென்றடைந்தது. இந்நிலையில் அனுராதபுரம் பகுதியில் இன்று காலை குறித்த நடைபவனி சென்று கொண்டிருந்த நிலையில் அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா சிறைச்சாலை அதிகாரிகளுடன் தான் பேசிவிட்டதாகவும்.
மாணவர்கள் சிறைச்சாலை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை உள்ளே விடுவதற்கு ஆவண செய் யப்படவேண்டும் என கூறியுள்ளதாகவும், மாணவர்களுக்கு கூறியுள்ளார். இதனை நம்பிய மாணவர்கள் சிறைச்சா லைக்கு சென்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் பெயரை குறிப்பிட்டு
அவர் முன் அனுமதி பெற்றிருப்பதாக கூறியுள்ளார். ஆகவே சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதிக்கும்படி சிறைச்சாலை அதிகாரிகளிடம் கேட்டிருந்தனர். எனினும் அவ்வாறு எந்த அரசியல்வாதியும் முன் அனுமதியை பெறவில்லை. என கூறிய சிறைச்சாலை அதிகாரிகள். மனிதாபிமான அடிப்படையில் சிலரை உள்ளே விடுவதாக கூறினர்.
இதனை தொடர்ந்து மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஆகியோர் சிறைச்சா லைக்கு சென்று அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப் போதும் என கூறியுள்ளனர்.
இதனையடுத்தே அரசியல் கைதிகள் போராட்டத்தை கைவிட தீர்மானித்தனர். ஆனால் பின்னர் தான் அவ்வாறான கருத்தை ஒருபோதும் கூறவில்லை. என மாவை சேனாதிராஜா மறுத்துள்ளார். இந்நிலையில் மாவை சேனாதிராஜா அரசியல் கைதிகளின் போராட்டத்தையும், மாணவர்கள், மற்றும் மக்களின் போராட்டங்களையும்
மலினப்படுத்துகிறார் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.