SuperTopAds

வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பேன் என கூறமாட்டேன். அது கட்சியின் முடிவு என்கிறாா் சித்தாா்த்தன்..

ஆசிரியர் - Editor I
வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பேன் என கூறமாட்டேன். அது கட்சியின் முடிவு என்கிறாா் சித்தாா்த்தன்..

தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகள் விடயம் குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அழுத்தங்களை கொடுக்க நான் தயாராக உள்ளேன். ஆனால் பாதீட்டுக்கு எதிராக வாக்களிப்பேன் என என்னால் கூற முடியாது. காரணம் அது கட்சியின் முடிவு.

மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கூறியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம் இன்று காலை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலமையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இதன்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் இல்லையேல் பாதீட்டுக்கு எதிராக வாக்களிப்பேன் என கூற முடியுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பாக பேசுவதற்காகவே நான் வந்திருக்கிறேன். பாதீட்டை புறக்கணிக்கவேண்டும் என்பதற்காக நான் வரவில்லை. நான் சரியாக சிந்திக்காது முடிவுகளை எடுக்க முடியாது. 

வார்த்தைகளை விட முடியாது. நான் தமிழ்தேசிய கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு வேண் டுமானால் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அழுத்தங்களை கொடுக்கலாம். கொடுக்கிறேன். 

ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் ஆதரவாக வாக்களி க்கபோகிறோம் என்றால் நான் மட்டும் எதிராக வாக்களிக்க இயலாது. நான் கட்சி கட்டுப்பாட்டுடன் வேலை செய்கிறேன். 

எங்களுக்கு பொய்யான வார்த்தைகளை கூறிவிட்டு போக முடியாது. இந்த விடயத்தில் கட்சிதான் முடிவுகளை எடுக்கவேண்டும் என கூறியுள்ளார். மேலும் அரசியல் கைதிகளை இந்த அரசாங்கம் இலகுவாக விடுதலை செய்யப்போவதில்லை. 

இந்த அரசியல் கைதிகள் விடயத்தை இழுத்தடிக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது. என்பதை நான் அரசியல் கைதிகளுக்கு நேரடியாகவே கூறியிருக்கிறேன். அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை ஆரம்பித்து 5வது நாள் நான் அவர்களை சந்தித்து 

மேற்படி விடயத்தை கூறியிருக்கிறேன்.  மேலும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை அரசியல் கைதிகள் நிறுத்தவேண்டும். எனவும் நான் கேட்டிருக்கிறேன். மேலும் இந்த விடயம் தொடர்பாக பிரதமருடன் பேசி ஒரு உத்தரவாதத்தையாவது தாருங்கள் என கேட்டேன். 

ஆனால் பேசி தீர்மானித்ததன் பின்னதாகவே அதை குறித்து எதாவது செய்யலாம். என பிரதமர் எனக்கு கூறியிருக்கின்றார். இதனையும் பிரதமரை சந்திக்க முன்னதாகவே அரசியல் கைதிகளுக்கு நான் கூறிவிட்டேன் என்றார்.