SuperTopAds

ஜனாதிபதியின் உத்தரவையடுத்து காணி விடுவிப்பு தொடர்பில் கூட்டம்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியின் உத்தரவையடுத்து காணி விடுவிப்பு தொடர்பில் கூட்டம்..

யாழ்ப்பாணக் குடாநாட்டில் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் எதிர்வரும் 16ஆம் திகதி முக்கிய கூட்டம் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலர்கள், முப்படைத் தளபதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தற்போதும் 4 ஆயிரத்து 265 ஏக்கர் காணி படையினர் வசமுள்ளது. இவற்றில் பாடசாலைகள் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் காணிகளும், 

தனியார் காணிகளும் உள்ளடக்கம். இந்தக் காணிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் ஆராய்ந்து, வடக்கு கிழக்கு அரச தலைவர் செயலணிக்கு அறிக்கை சமர்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. 

இதற்கு அமைவாகவே மேற்படி கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு ஜனாதிபதி அபிவிருத்திச் செயலணியின் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. 

எதிர்வரும் டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.