வவுனியா மாவட்ட செயலகம் மீது சீறிபாய்ந்த செட்டிகுளம் மக்கள்..

ஆசிரியர் - Editor I
வவுனியா மாவட்ட செயலகம் மீது சீறிபாய்ந்த செட்டிகுளம் மக்கள்..

வவுனியா- செட்டிகுளம் பிரதேசம் மிகவும் பின்தங்கியிருக்கும் நிலையில் மேற்படி பிரதேசத்தின் மேம்பாட்டுக்காக வவுனியா மாவட்ட செயலகம் ஒன்றையுமே செய்யவில்லை. என காட்டமான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் செட்டிகுளம் மக்கள் இ ந்த விடயத்தில் மாவட்ட செயலகம் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறியுள்ளனா். 

வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவின். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இணைத்தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் தலமையில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி கோரிக்கைகள் 

செட்டிகுளம் மக்கள் சார்பில் கூட்டத்தில் கலந்துகொண்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் முன் வைக்கப்பட்டன. குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொது மக்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளாக முதலியார் குளம் பகுதியில் உள்ள மதுபானசாலையுடன் கூடிய விருந்தினர் விடுதியில் 

அங்கே சென்று மது அருந்துபவர்கள் தவிர்ந்து வெளியாருக்கும் வழங்கப்படுகின்றது. அத்துடன் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இத்தோடு பல குற்றச் செயல்களும் இடம்பெறுகின்றது. எனவே இந்த மதுபானசாலையை அங்கிருந்து அகற்றியே ஆகவேண்டும். 

என பலராலும் விடுத்த கோலிக்கைநினையடுத்து குறித்த மதுபானசாலைக்கான 2019ம் ஆண்டிற்கான அனுமதியினை பிரதேச செயலாளர் வழங்க கூடாது. எனத் தீர்மானிக்கக்பட்டது. இதேபோன்று செட்டிக்குளத்தில் அதிக கிராமங்கள் காட்டு யானைத் தாக்கத்தின் அச்சத்திலேயே காணப்படுகின்றது. 

அக் கிராமங்களிற்கு பாதுகாப்பு வேலி அமைக்குமாறு நீண்டகாலமாக விடப்படும் கோரிக்கை இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. இதேநேரம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்குள் நுழைந்தும் இதுவரை மழை கிடையாது இதனால் நீர்த் தட்டுப்பாடு பெரும் பிரச்சணையாகவே உள்ளது .

போன்றவற்றிற்கான தீர்வை முன்வைக்க வேண்டும். எனக் கோரிக்கை விடுத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு