புதுப் பொலிவு பெறும் கரைச்சி பிரதேச சபை..

ஆசிரியர் - Editor I
புதுப் பொலிவு பெறும் கரைச்சி பிரதேச சபை..

கிளிநொச்சி மாவட்டத்தின்,கரைச்சிப் பிரதேச எல்லைகளின்  இரு மருங்கிலும் வரவேற்பு வளைவு மற்றும் மணிக்கூட்டுக் கோபுரம் என்பவற்றை கரைச்சிப் பிரதேச சபையின் ஆளுகைப் பரப்பில் நிறுவுதற்கு கரைச்சிப் பிரதேச சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபையின் எட்டாவது அமர்வு நேற்று முன்தினம்  சபை மண்டபத்தில் தவிசாளர் வேழமாலிதன் தலமகயில் நேற்று முன்தினம்  இடம்பெற்றபோதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த தீர்மானம் நீண்ட ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்று பின்னர் பிரேரணையாக  நிறைவேறியது.

வளைவுகள் இரணைமடுச்சந்தி, ஆணையிறவு ஆகிய பகுதிகளிலும்  மணிக்கூட்டுக் கோபுரமானது  டிப்போச்சந்தியிலும் அமைவது  என இனங்காட்டப்பட்டு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதோடு குறித்த பணிக்காக   நிபுணத்துவக் குழு ஒன்றை அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

இதேபோன்று  நகரத்தில் உள்ள மருதமரங்களை பாதுகாப்பது தொடர்பிலும்  விவாதத்தின் பின் நிறைவேற்றப்பட்டது. அதாவது  அனைத்து மரங்களையும் பாதுகாப்போம் எனவும் மரங்கள் மீது விளம்பரங்கள் காட்சிப்படுத்துவதை முற்றாக தடுப்போம் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

பிரமந்தனாறு கிராமத்தில் பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ள குடிநீர் கிணறு மற்றும் நீர்த்தாங்கியை உள்ளடக்கி பாதுகாப்பு வேலி அமைத்தல் – சபை ஏகமனதாக ஏற்று தீர்மானம் நிறைவேறியது.

அரச சார்பற்ற நிறுவனங்களால் அமைக்கப்பட்டு தற்போது இயங்காத நிலையில் உள்ள தொழில் பேட்டைகளை மீள இயங்க செய்தல் – நீண்ட விவாதங்களின் பின் பிரேரணை நிறைவேறியது. சம்பந்தப்பட்ட திணைக்களங்களோடு தொடர்புகளை மேற்கொள்வதாக கருத்துக்கள் பகிரப்பட்டது. 

இதேநேரம்  நீதியான அறம்கூறும் ஊடகச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல் – பிரேரணை மீதான விவாதம் சுமார் 2 மணி நேரம் வரை நடைபெற்று நிறைவேறியது, ஊடகத்தார் ஊடக தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சபை உறுப்பினர்களும் சிறந்த சொற்பிரயோகங்களையும், 

சிறந்த முகப்பாவனை, சைகையினை காண்பித்தல், சபை ஒழுங்குகளை கடைப்பிடித்தல் என்பன எதிர்காலத்தில் சிறந்த பயனைத் தரும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு