ஆணையிறவு- உமையாள்புரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உப்பளம் இழுத்து மூடப்படும்..

ஆசிரியர் - Editor I
ஆணையிறவு- உமையாள்புரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உப்பளம் இழுத்து மூடப்படும்..

ஆனையிறவுப் பகுதியில் ஏ9 வீதிக்கு கிழக்குத் திசையில் எந்த உப்பளமும் இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது என்ற மாவட்டத்தின் தீர்மானத்தை மீறி அப்பகுதியில் அமைக்கப்பட்ட உப்பளம் உடனடியாக இழுத்து மூடப்படும் அல்லது அதற்கு கடுமைநான நடவடிக்கை இடம்பெறும் என மாவட்டச் செயலாளர் சு.அருமைநாயகம் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிலையில் இரணைமடு விவசாய சம்மேளணச் செயலாளரும் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினருமான மு.சிவமோகன் ஆனையிறவுப் பகுதியில் உப்பளம் அமைக்கும்  விடயத்தினை சுட்டிக்காட்டினார்.

குறித்த விடயத்திற்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் போருக்கு முன்னர் உப்பளம் நடாத்தியதாக தெரிவித்து சுற்றுச் சூழல் அதிகார சபையின் அனுமதியை மட்டுமே பெற்ற நிலையில். பிரதேச சபையின் அனுமதியைக்கூட பெற்றுக்கொள்ளாது. கருவாட்டிற்கான உப்பு அரைத்து பொதி செய்யப்படுகின்றது. குறித்த விடயத்தினை நேரிலும் அவதானித்தோம்.

இதேநேரம் இவ்வாறு இப்பகுதியில் உப்பளம் அமைக்கும் விடயத்தினை கடந்த 9ம் மாதம் விவசாய பிரதி அமைச்சர் அங்கயன் இராமநாதன் தலமையில் இடம்பெற்ற கலந்துரையாடலிற்கு சமூகமளித்த சுற்றுச் சூழல் அதிகார சபையினர் அந்த உப்பளத்திற்கு வழங்கிய அனுமதியை இரத்துச் செய்து கடிதம் அனுப்பியுள்ளோம் எனத் தெரிவித்தனர். இருப்பினும் அதே அனுமதிக் கடித்த்தை வைத்து கடந்த வாரம் உப்பளம் திறக்கப்பட்டுவிட்டது.

எனவே உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க ஒஏண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இவ்விடயத்திற்குப் பதிலளிக்கும்போதே மாவட்டச் செயலாளர் மேற்படி பதிலை வழங்கினார். குறித்த பதிலில் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் ,

இவ் விடயத்தினை நிறுத்த வேண்டும் என மாவட்டச் செயலகத்தால் தீர்மானிக்கப்பட்ட பின்பும் அதேபோல் மேற்படி விடயத்தினை நிறுத்தியுள்ளோம் என சுற்றுச் சூழல் அதிகாரி தெரிவித்த நிலையில் எவ்வாறு திறக்கப்பட்டது.்என உடன்னியாக சுற்றுச் சூழல் அதிகார சபை மற்றும் பிரதேச சபை இரண்டிலும் எழுத்து மூலப் பதிலை பெற்றுச் சமர்ப்பிக்கவும் அதன் அடிப்படையில் உடனடியாக தடை செய்யப்படும். என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு