சாவகச்சோி நிதி நிறுவனத்தில் கொள்ளையிட்ட 3 பேரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி..

ஆசிரியர் - Editor
சாவகச்சோி நிதி நிறுவனத்தில் கொள்ளையிட்ட 3 பேரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி..

சாவகச்சேரி நகர் பகுதியில் உள்ள நிதிநிறுவனம் ஒன்றில் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டனர் என குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களையும் பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்துள்ளார்.

சவகச்சேரியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கடந்த 19ஆம் திகதி புகுந்த கொள்ளையர்கள் காசாளரை மிரட்டி 18 லட்சத்து 91ஆயிரத்து 140 ரூபாயை கொள்ளையிட்டு தப்பி சென்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நிதி நிறுவனத்தின் பெண் காசாளரே தனது காதலன் மற்றும் நண்பனுடன் சேர்ந்து திட்டமிட்டு கொள்ளை நாடகத்தை அரங்கேற்றினார் என குற்றம் சாட்டி மூவரையும் கைது செய்தனர்.

கைது செய்ப்பட்ட மூவரும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அந்நிலையில் நேற்றைய தினம் மன்றில் முற்படுத்தப்பட்ட போது அவர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை விண்ணப்பம் செய்தனர்.

அதனை ஆராய்ந்த நீதிவான் மூவரையும் தலா 5 லட்ச ரூபாய் பெறுமதியான இரு ஆள் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் வழக்கினை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Radio
×