14 வயதில் 15 வயது சிறுவனுடன் காதல், கண்டித்ததால் தீ மூட்டி சிறுமி தற்கொலை..
தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்த் நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று(10) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் கடந்த 1ம் திகதி இடம்பெற்ற நிலையில், சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் கூறினர்.
கோண்டாவில் மேற்கு பகுதியினை சேர்ந்த ஜெயக்குமார் சத்தியா வயது(14) என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்தவர் ஆவார். குறித்த சிறுமி அயல்வீட்டு சிறுவன் மீது காதல் கொண்டிருந்துள்ளார்.
01ம் திகதி குறித்த சிறுமி, அயல்வீட்டு சிறுவனுடன் வீதியில் நின்று கதைத்துள்ளார். இதனை கண்ட சிறுவனின் சகோதரி தாக்கியுள்ளார். மனமுடைந்த சிறுமி வீட்டுக்கு சென்று தனக்கு தானே தீ வைத்துள்ளார்.
சிறுமியினை காப்பாற்றி சென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து சேவை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிறுமி இன்று(08) உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணையினை வைத்தியசாலையின் திடிர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதணையின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.