விஞ்ஞான பாட ஆசிரியர்கள் 440 போரை ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரப்படவுள்ளது..

ஆசிரியர் - Editor I
விஞ்ஞான பாட ஆசிரியர்கள் 440 போரை ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரப்படவுள்ளது..

வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞான பாடத்திற்கு நிலவும்  440 வெற்றிடங்களையும் நிரப்பும் வகையில் மீண்டும் விண்ணப்பம் கோரப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு உட்பட்ட பாடசாலைகளில் தற்போது 440 விஞ்ஞான பாட ஆசிரியர்களிற்கான வெற்றிடம் நிலவுகின்றது. 

இவ்வாறு வெற்றிடமாக கானப்படும் விஞ்ஞான பாட ஆசிரிய வெற்றிடத்தினையும் நிரப்புவதற்காக பகிரங்க விண்ணப்பம் கோரப்படவுள்ளது .

இவ்வாறு போரப்படும் விண்ணப்பத்திற்பு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த விஞ்ஞானப் பட்டதாரிகள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும். 

அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் தேவைக்கு அதிகமாக கிடைக்கும் சந்தர்ப்பத்தில் போட்டிப்பரீட்சை மூலமும் தேவையான அளவிற்கு உட்பட்ட விண்ணப்பங்கள் கிடைப்பின் நேரடியாகவே நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வுகள் இடம்பெறும்.

வடக்கு மாகாணத்தினைப் பொறுத்த மட்டில் விஞ்ஞானம் , கணிதம் , ஆங்கிலம் சார் பட்டதாரிகள் மிகவும் குறைவாகவே கானப்படுவதனால் நாம் போரும் எண்ணிக்கையான பட்டதாரிகள் விண்ணப்பிப்பது குறைவாகவே கானப்படுகின்றது. 

குறிப்பாக குறித்த 3 பாடங்களிற்காகவும் கடந்த காலங்களிலும் விண்ணப்பங்கள் கோரப்பட்டபோதும் எம்மால் கோரப்பட்ட எண்ணிக்கையான விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை.

இதன் காரணமாகவே குறித்த பாடங்களிற்கான வெற்றிடங்கள் அதிகமாக கானப்படுகின்றது. என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு