SuperTopAds

மக்களுக்கு முன் பொலிஸாருடன் வீர வசனம் பேசிவிட்டு பின்னர் பணிந்தாரம் சிவாஜி..

ஆசிரியர் - Editor I
மக்களுக்கு முன் பொலிஸாருடன் வீர வசனம் பேசிவிட்டு பின்னர் பணிந்தாரம் சிவாஜி..

மக்கள் முன்பாக நீதிமன்ற அழைப்பாணையை  கையேற்க மறுத்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொலிஸ் நிலையத்தின் பின் கதவால் சென்று கட்டளையை கையேற்றுச் சென்றார்.

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் உள்ள குமரப்பா , புலேந்திரன் உள்ளிட்ட 12பேரின் நினைவுத் தூபி புனரமைக்கும் முயற்சி தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிசார் நீதிமன்றன் கவனத்திற்கு கொண்டு சென்று அது தொடர்பான அதற்கான வழக்கிற்கான அழைப்பாணையை தீருவிலிற்கு கொண்டு சென்று கையளிக்க முயன்றனர்.

இவ்வாறு பொலிசார் குறித்த அழைப்பாணையை கையளிப்பதற்கு முன்பே அப் பிரதேசத்தில் அடிக்கல் நாட்டில் ஆரம்ப பணி தொடக்கம் இடம்பெற்றிருந்த நிலையில் பொலிசார் அழைப்பானை சகிதம் அந்த இடத்திற்கு சமூகமளித்த நிலையில் பொலிசார் வழங்கிய அழைபாணையை நீட்டியவேளை சம்பவத்தை ஊகித்த சிவாஜிலிங்கம் பணியின் நிமித்தம் அதனை கையேற்க மறுத்திருந்தார். 

இந்த நிலையில் குறித்த இடத்தில் நிகழ்வுகள் , குழப்பங்கள் நிறைவுற்ற நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் உள்ள இரு வாசல்கதவுகளில் பிரதான வாசல் கதவு அன்றி இரண்டாவது வாசல் கதவின் ஊடாக பிரவேசித்த சிவாஜிலிங்கம் பொலிசாரிடம் இருந்து அழைப்புக் கடிதத்தினை பெற்றுச் சென்றார். எனத் தெரிவிக்கப்படுகின்றது.