அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் இருந்து அனுராதபுரம் வரை நடைபவனி..
சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி மாபெரும் நடைபவனி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடைபவனியின் சமூகத்தின் சகல மட்டங்களிலிருந்தும் மாணவர்களால் ஆதரவு கோரப்பட்டுள்ளது. சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்தும் இன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்ற இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தின் நிறைவில், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன் நடைபவனி பற்றி அறிவித்ததோடு, ஆதரவு கோரி பகிரங்க அறைகூவலையும் விடுத்தார்.
சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்தும் நாளை செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணிக்கு யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ள நடைபவனி,
கிளிநொச்சி, வவுனியா ஊடாக அநுராதபுரம் சிறைச்சாலை வரை இடம்பெறவுள்ளதாகவும், தமிழ் மக்கள் அனைவரும் அதற்கான ஆதரவை நல்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.