யாழ்.கொக்குவில் பகுதியில் விசேட அதிரடிப்படையினரின் சோதனை அதிகரிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொக்குவில் பகுதியில் விசேட அதிரடிப்படையினரின் சோதனை அதிகரிப்பு..

யாழ்.கொக்குவில் பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்ட நிலையில் கடத்த சில தினங்களாக அப்பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் வீதி சோதனை நடவடிக்கைளிலும் சுற்றுக்காவல் (ரோந்து) பணிகளிலும் ஈடுபட்டு உள்ளனர். 

கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நான்கு இடங்களில் ஆறு பேர் கொண்ட வாள் வெட்டு குழு அட்டகாசத்தை புரிந்திருந்தன நாச்சிமார் கோவிலடியில் வீதியால் சென்ற பட்டா ரக வாகனத்தை வழிமறித்து சாரதியை தாக்கியதுடன் வாகனத்தையும் அடித்து நொறுக்கி சேதத்தை ஏற்படுத்தினார்கள், பின்னர் தம்பி லேன் பகுதியில் உள்ள கடை ஒன்றினை அடித்து உடைத்து சேதப்படுத்தினார்கள், 

அதன் பின்னர் அங்கிருந்து இருந்து சென்று கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து ஹயஸ் ரக வாகனம் முச்சக்கர வண்டி என்பவற்றை அடித்து நொறுக்கியதுடன் வீட்டின் யன்னல் கண்ணாடிகளையும் அடித்து உடைத்து சேதமாக்கினார்கள். அதன் பின்னர் அங்கிருந்து சென்று ஓட்டுமட பகுதியில் நின்று வீதியால் சென்றவர்களை வாளினை காட்டி மிரட்டி யுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பபில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்த போதிலும் 

மூன்று நாட்கள் கடந்த நிலையிலும் எவரும் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படவில்லை.  இந்நிலையிலேயே தற்போது பொலிஸ் விசேட அதிரடி படையினர் சோதனை நடவடிக்கைளில் ஈடுபட்டுஉள்ளனர்.  இதேவேளை தமக்கு அதிகாரத்தை தந்தால் இரண்டு நாட்களுக்குள் யாழில். நடைபெறும் வன்முறை சம்பவங்களை கட்டுக்குள் கொண்டு வர தம்மால் முடியும் என இராணுவ தளபதி கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிட தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு