தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலை செய்யவேண்டும்..

ஆசிரியர் - Editor I
தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலை செய்யவேண்டும்..

அரசியல் கைதிகளின் அரசியலை பயங்கரவாதமாக பார்க்குமோர் சட்டக்கட்டமைப்புக்குள் நின்று அதை சட்ட விவகாரமாக அணுக கூடாது. மாறாக அதனை அரசியல் விவகாரமாகவே அணுக வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் ஓர் அரசியல் தீர்மானத்தை எடுத்து கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்.  

என யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.  அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.பல்கலை கழக முன்றலில் இருந்து அனுராதபுரம் சிறைச்சாலை வரையில் நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளனர். 

அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, 

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்..

அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல அது ஓர் அரசியல் விவகாரம். எனவே அரசியல் கைதிகளின் அரசியலை பயங்கரவாதமாக பார்க்குமோர் சட்டக்கட்டமைப்புக்குள் நின்று அதை சட்ட விவகாரமாக அணுக கூடாது. 

மாறாக அதனை அரசியல் விவகாரமாகவே அணுக வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் ஓர் அரசியல் தீர்மானத்தை எடுத்து கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்.  இதனை வலியுறுத்தியும் அரசியல் கைதிகளின்உண்ணாவிரத போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணவராகிய நாம் 

பல்கலைக்கழக முன்றலில் இருந்து கிளிநொச்சி வவுனியா ஊடாக அநுராதபுர சிறைச்சாலை வரை நடைபயணம் ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளோம். அனைத்து தமிழ் சமூக ஆர்வலர்களையும் இப் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.  என மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு