பாலாலி விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்கும் தொழிநுட்ப பிரச்சினைக்கு தீர்வு..

ஆசிரியர் - Editor I
பாலாலி விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்கும் தொழிநுட்ப பிரச்சினைக்கு தீர்வு..

பலாலி-தமிழகத்திற்கு இடையிலான வானூர்திச் சேவையை நடத்துவதில் எழுந்துள்ள தொழில்நுட்ப பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இலங்கை இந்திய அதிகாரிகள் கொழும்பில் நடத்திய பேச்சுக்களில் இதற்கான தீர்வு காணப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

பலாலி வானூர்தி நிலையத்தைப் பிராந்திய வானூர்தி நிலையத்தைப் பிராந்திய வானூர்தி நிலையத்தைப் பிராந்திய வானூர்தி நிலையமாக்குவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி வானூர்தி நிலையங்களுக்கு ஆரம்பத்தில் சேவை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக வானூர்திப் பாதை வரையும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பலாலி வானூர்தித் தளத்துக்கும், தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி வானூர்தித்தளங்களுக்கும் இடையிலான தூரம் மிகக் குறைவாக உள்ளது. இதனால் வானூர்திகள் தமது வான் பாதையிலிருந்து பதியத் தொடங்கும் போது எந்தவானூர்தி நிலையக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும் 

என்பது தொடர்பான தொழில்நுட்ப பிரச்சினை எழுந்தது இதுதொடர்பில் இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. இலங்கை வான் எல்லைக்குள்ளேயே வானூர்திகள் பதியத் தொடங்கும் அதேவேளை பலாலி வானூர்தி நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்பாக இலங்கை வான் பரப்புக்குள் அவை வட்டமடித்தே தரையிறங்கும் என்றும் தீர்வு காணப்பட்டுள்ளது. 

வானூர்தித் தளத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனேயே தொடர்புகொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை திருச்சி அல்லது மதுரையிலிருந்து ஆண்டுறுதிக்குள் பலாலி வானூர்தி தளத்துக்கு அன்டனோவ் தர வானூர்தி நிச்சயம் தரையிறங்கும் என்று இரண்டு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு