வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரா் ஆலய நிா்வாகத்திற்கு மீண்டும் பொலிஸாா் அழைப்பாணை..

ஆசிரியர் - Editor I
வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரா் ஆலய நிா்வாகத்திற்கு மீண்டும் பொலிஸாா் அழைப்பாணை..

வவுனியா மாவட்டம் நெடுங்கேணிப் பகுதியில் உள்ள  வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம்   அதன் நிர்வாகத்தினை மீண்டும் பொலிஸ் நிலையம் வருமாறு நெடுங்கேணி பொலிஸாா் அழைப்பு விடுத்துள்ளனா்.

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தமிழ் மக்கள் மேற்கொண்டு வந்த பூசை வழிபாடுகளைத் தடைசெய்த தொல்பொருள் திணைக்களத்தினர் அப் பகுதியில் ஓர் புத்த கோயிலை அமைக்க முயன்ற குழுவினருக்கு அனுமதி வழங்க 

முயற்சியை அப்பகுதி மக்களும் ஆலய நிர்வாகமும் இணைந்து தடுக்க முற்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொலிசார் ஆலய நிர்வாகத்தை அழைத்து முதலில் அப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறுயதனால் 

அப் பகுதி மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் வழிபட அனுமதிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் அதன் பின்னர் பலரும் அப்பபுதிக்கு நேரில் சென்று வந்த நிலையில் கடந்த வாரம் விமல் வீரவன்சாவின் கட்சியினரும் 

நேரில்  பார்வையிட்டுச் சென்றனர். இந்த நிலையில் அண்மைக்காலத்தில் அதிகமானோர் அப்பகுதிக்குச் சென்று மலையில் உள்ள ஆலயத்திற்கு ஏறிச் சென்றமையினால் நிர்வாகத்தினால் அமைக்கப்பட்டிருந்த ஏணி சேதமடைந்திருந்த்து.

இதனால் அங்கே வரும் அனைவரின் பாதுகாப்பு கருதி ஆலய நிர்வாகம் இரும்பினால் ஓர் ஏணிப் படியினை அமைத்திருந்தனர். இதனை மலைப் பகுதியில் பொருத்த முயன்றதனையடுத்தே பொலிசார் தலையிட்டு 

மீண்டும் ஆலய நிர்வாகத்தினை நேற்று மாலையில் பொலிஸ் நிலையம் அழைத்தனர். இவ்வாறு ஆலய நிர்வாகத்திற்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து அச்சுறுத்துவதன் மூலம்  அதிலிருந்து விலகி ஒதுங்குவதன் மூலம் 

தமிழர்களை ஓரம் கட்டி புத்தர் சிலை வைக்கும் செயலிற்கு பொலிசார் உறுதுணைஅளிப்பதாகவே எண்ணத்தோன்றுகின்றது. என ஆலய நிர்வாகத்தில் உள்ள பெயர் கூற விரும்பாத ஒருவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு