SuperTopAds

பிரதேச செயலாின் அறிவித்தலை தொடா்ந்து வடமராட்சி கிழக்கிலிருந்து வெளிமாவட்ட மீனவா்கள் வெளியேற்றம்..

ஆசிரியர் - Editor I
பிரதேச செயலாின் அறிவித்தலை தொடா்ந்து வடமராட்சி கிழக்கிலிருந்து வெளிமாவட்ட மீனவா்கள் வெளியேற்றம்..

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகப் பகுதிக்குள் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பவர்களையும் 48 மணி தேரத்தில் வெளியேறுமாறு பிரதேச செயலாளர்  அறிவித்தல் விடுத்த நிலையில்  பெரும்பாலான வாடிகள் அகற்றப்பட்டு வெளியேறிவருவதாக வடமராட்சி கிழக்கு சமாசத் தலைவர் தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கில் தங்கி நின்று கடலட்டை தொழிலில் ஈடுபடும் பிற மாவட்டத்தவர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் அரச நிலத்தை அனுமதியின்றி ஆக்கிரமித்து அங்கே வாடி அமைத்து தங்கியிருந்து கடல் அட்டை பிடித்து வந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நியாய ஆதிக்க எல்லைக்குள் வாடி அமைத்தவர்களிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 

அவ்வாறு தங்கியிருந்த மீனவர்களை உடன் வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் குறித்த மீனவர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர் . இதேநேரம் வடமராட்சி கிழக்குப் பகுதியின் பருத்தித்துறை நீதிமன்ற நியாய ஆதிக்க எல்லைப்பரப்பிற்குள் உள்ள குறித்த தொழிலில் ஈடுபடும் பிற மாவட்ட மீனவர்கள் தொடர்ந்தும் அரச நிலத்தில் 

அனுமதியின்றி தங்கியிருந்து கடல் அட்டை பிடிப்பதனால் அவர்களிற்கு எதிராகவும் அரச நிலத்தை அத்துமீறி அபகரித்து குடியிருப்பதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் வகையில் ஏற்கனவே ஒரு தடவை பிரதேச செயலாளரினால்  அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்த நிலையில் கடந்த புதன் கிழமை மீண்டும்  நாகர்கோவில் கிழக்கு , நாகர்கோவில் மேற்கு பகுதியில் பிரதேச செயலாளரினால்  அறிவித்தலும் ஒட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அரச நிலத்தில் அத்துமீறி குடியிருப்பதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் வகையில் முன் அறிவித்தலாகவும் அவர்களிற்கான இறுதி சந்தர்ப்பமாகவும் அறிவுறுத்தல் ஒட்டப்பட்டுள்ள நிலையில்  அங்கிருந்தும் பிற மாவட்ட மீனவர்கள் வெளியேறி வருகின்றனர். இப் பகுதியில் சுமார் 500 மீனவர்கள் தங்கியிருந்த நிலையில் தற்போது 150 வரையிலான மீனவர்களே  தங்கியுருக்கின்றனர். என்றார்.