யாழ்.அாியாலையில் மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கி சூடு. அதிரடிப்படையினா் இருவா் கைது..
யாழ்.அரியாலை பகுதியில் சிவில் உடை தரித்தோரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை 06 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் கள்ள மணல் ஏற்றும் சம்பவங்கள். அதிகரித்து காணப்பட்ட நிலையில் , அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நீண்ட நேரம் காத்திருந்துள்ளனர்.
அவ்வேளை கள்ள மணல் ஏற்றி வந்த இரு உழவு இயந்திரங்களை அவர்கள் வழிமறித்த போது சாரதிகள் வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்து ஓட்டி சென்றுள்ளனர்.
அந்நிலையில் சிவில் உடையில் நின்றவர்கள் வானத்தை நோக்கி தமது கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதன் போதும் வாகனத்தை நிறுத்தாது ஓட்டி சென்றுள்ளனர். அவ்வேளை உழவு இயந்திரத்தை நோக்கி சுட்டுள்ளனர். இருந்த போதும் சாரதிகள் வாகனத்துடன் தப்பியோடியுள்ளனர்.
குறித்த துப்பாக்கி சூடு தொடர்பில் தரப்பினர் உரிமை கோரவில்லை. இதேவளை கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் குறித்த பகுதியில் சிவில் உடை தரித்தோர் இரு இளைஞர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் எவரும் உரிமை கோராத நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டனர் என பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு,
யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.