படுக்கையறையில் கைதொலைபேசியை சுவிட்ச் ஓவ் செய்து வையுங்கள். இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சாிக்கை..

ஆசிரியர் - Editor I
படுக்கையறையில் கைதொலைபேசியை சுவிட்ச் ஓவ் செய்து வையுங்கள். இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சாிக்கை..

படுக்கை அறையில் கையடக்க தொலைபேசியை சுவிட்ச் ஓவ் செய்து வைக்குமாறும், கையடக்க தொலைபேசிகளை படுக்கை அறையில் வைத்திருப்பதையும், நீண்டநேரம் இரவில் தொலைபேசி பயன்படுத்துவதையும் நிறுத்துமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுள்ளது. 

சுகாதார, போசணை, சுதேச வைத்திய அமைச்சின் கீழ் இயங்கும் சுகாதார மேம்பாட்டு பணியகம் இது தொடா்பில் இலங்கை மக்களுக்கு சிங்கள மொழியில் வெளியிட்டுள்ள எச்சாிக்கை அறிவித்தலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது. 

தூங்கும் அறையில் கைத்தொலைபேசி பாவிப்பது மற்றும் இரவு நேரத்தில் நீண்ட நேரம் அறையில் கைத்தொலைபேசியை வைத்திருப்பது கடும் சுகாதார பாதிப்புக்கு காரணாமாகும்.

கைத்தொலைபேசி மற்றும் கணினி தொடர்பான உபகரணங்களில் அதிகம் நேரம் செலவிடுவது சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. விசேடமாக தூங்கும் அறையில் கைத்தொலைபேசி வைத்திருப்பது மூளை மற்றும் நரம்பு தொகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படும் , 

இரவு தூங்க செல்லும் முன் அவ்வாறான உபகரணங்களை அறையிலிருந்து வெளியகற்றி அல்லது செயல்பாட்டினை துண்டித்து (OFF) வைக்குமாறு பொது மக்கள் வேண்டபடுகின்றார்கள்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு