யாழ்.மாநகரசபை உறுப்பினர் வேலும்மயிலும் குகேந்திரன் மீதான வழக்கு நவம்பர் மாதம் 8ம் திகதி தீர்ப்பு..
ஈ.பீ.டீ.பியின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வேலும்மயிலும் - குகேந்திரன் இரட்டைப் பிரஜா உரிமை கொண்டமையினால் மாநகர சபையில் அங்கம் வகிக்க முடியாது எனத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நவம்பர் மாதம் 8ம் திகதி வழங்கப்படும் என நேற்றைய தினம் மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் ஈ.பீ.டீ.பி கட்சியை சேர்ந்த வேலும்மயிலும் - குகேந்திரன் இரட்டைப் பிரஜா உரிமை கொண்டவர் என்ற அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்க முடியாது. என்ற காரணத்தினால் குகேந்திரனின் மாநகர சபை உறுப்புறுமை செல்லுபடியற்றது . என தேர்தல் ஆணையகத்திற்கு உத்தரவிடக்கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினரால் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கினை நேற்றைய தினம் மேன் முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்காக எடுத்துக்கொண்டது . இதன்போது வழக்காழர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ம.ஆ.சுமந்திரன் மற்றும் நிரான் அங்கிற்றல் ஆகியோர் ஆயராகினர்.
இருதரப்பு வாதமும் நேற்றைய தினம் நிறைவு செய்த நிலையில் எழுத்து மூலமான சமர்ப்பனத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்காளர் தரப்பு சட்டத்தரணிகள் தமது எழுத்துமூல சமர்ப்பனத்தை ஒக்டோபர் 12ம் திகதிக்கு முன்பாக முன்வைக்க வேண்டும் எனக்போரப்பட்ட நிலையில் எதிர் மனுதாரர் சார்பில் எழுத்து மூல சமர்ப்பனம் முன் வைக்கவில்லை.்எனத் தெரிவிக்கப்பட்டது.
இவற்றினை ஆராய்ந்த மன்று குறித்த வழக்கின் எழுத்துமூல சமர்ப்பனத்தின் பின்பாக நவம்பர் 8ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும்.்எனத் தெரிவிக்கப்பட்டது.