மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது..

ஆசிரியர் - Editor I
மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது..

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஓர் பிரதேச செயலாளர் பிரிவின் செயலாளர் அலுவலக ஊழியர்கள் துஸ்பிரயோக முயற்சி, லஞ்சம், பணியாளர்கள் மீது அபகீர்த்தி ஏற்படுத் முயற்சித்தமை  எனப் பலவகை குற்றச் சாட்டுக்களை சக ஊழியர்கள் மாவட்டச் ணெயலாளரின் ஊடாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் உடன் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளர் விடுத்த கோரிக்கையின் பெயரில் மாவட்டச் ணெயலகத்தின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேரில் சென்று விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் இடம்பெற்ற விசாரணைகளில் சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்களில் அதிகமானவை உண்மை எனக் கண்டறியப்பட்ட நிலையில் இதற்கான அறிக்கை தயாரிப்பு பணிகள் மும்மரமாக இடம்பெற்று அதன் முழுமையான அறிக்கை தற்போது மாவட்டச் செயலாளரின் கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை தொடர்பில் மாவட்டச் செயலாளரின் கவனத்தின் பின்னர் அடுத்த கட்டமாக அமைச்சின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் இடத்து பிரதேச செயலாளர் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்பட வேண்டிய நிலமையே ஏற்படும் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் குறித்த பிரதேச செயலாளர் ஏற்கனவே இரு மாவட்டங்களில் பணியாற்றிய காலத்திலும் விசாரணைக்கு உட்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கையின் காரணமாக குறிப்பிட்ட காலங்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு