குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைளுக்கு நினைவு தூபி அமைக்கும் பணி நிறுத்தம்..
தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளான குமரப்பா புலேந்நிரனின் உள்ளிட்ட 12 மாவீரர்களின் நினைவுத் தூபியை அமைப்பதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் குமரப்பா புலேந்திரனின் நினைவுத் தூபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிவதற்கு இன்று காலையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதனை எதிர்த்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அப் பகுதியில் பெரும் குழப்பமே ஏற்பட்டிருந்தது. இதன் போது புலிகளுக்கு தூபி அமைக்கப்படுவதாக நீதிமன்றின் கவனத்திற்கு இந்த விடயத்தை பொலிஸாரும் கொண்டு சென்றனர்.
இதற்கமைய இந் நிகழ்வை நிறுத்தி நீதிமன்றுக்கு வருமாறு அழைப்புக் கட்டளை விடுக்கப்பட்டு இருந்தது. இதற்கமைய அடிக்கல் நாட்ட முடியாது என்று கூறியிருந்தனர்.
நீதிமன்றத்தில் பெறப்பட்ட அறிவித்தலை வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஆகியோரிடம் கொடுப்பதற்கு பொலிஸாரும் முயன்றுள்ளனர்.
ஆனபோதிலும் அவர்கள் அதனைப் பெறவில்லை. இதனையடுத்து நீதிமன்ற அறிவித்தலை அந்த இனத்தில் பொலிஸாரும் வாசித்துக் காட்டினர். அதன் போது சிவஜிலிங்கம் மற்றும் தவிசாளர் ஆகியோர் காதைப் பொத்திக் கொண்டு நின்றனர்.