முன்னைய அரசாங்கங்களை விடவும் இந்த அரசாங்கம் சிறந்தது. ஆனால் அது மட்டும் தமிழர்களுக்கு போதாது..
இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியங்களுக்கான அமைச்சர் மார்க் பீல்ட் அவர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது.
கடந்தஅரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளில் மாற்றம் உள்ளதாக தெரிவித்த இரா சம்பந்தன் அது மாத்திரம் போதாது என்றும் வலியுறுத்தினார்.
மேலும்ஐ.நா.மனித உரிமைபேரவையின் தீர்மானங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் இரண்டு வருட கால அவகாசம் கோரியிருந்தமையை சுட்டிக்காட்டிய அதேவேளை,
தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் பாரிய தாமதம் நிலவுவதனையும் சுட்டிக்காட்டினார். மேலும் மிக விரைவாக தீர்வு காணப்படவேண்டிய படையினர் வசமுள்ள மக்கள் காலாகாலமாக வாழ்ந்து வந்த மக்களின்காணி விடுவிப்பு,
நீக்கப்படும் என பலமுறை அரசாங்கம்வாக்கு கொடுத்தும் இன்னமும் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்தது வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, தாமதித்து நிறுவப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறமையாக செயற்பட எத்தனிக்கிறார்கள்,
இந்த விடயங்கள் தாமதங்களின்றி செயற்படுத்தப்பட்டிருக்க வேண்டியவை எனவும் இரா. சம்பந்தன் அவர்கள் தெரிவித்தார். மேலும் உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழு இன்னமும் நிறுவப்படாமையும் கவனிக்கப்படவேண்டிய விடயம் என தெரிவித்த இராசம்பந்தன்
உண்மையை மறைத்து விட முடியாது எனவும் உண்மை நிலை நாட்டப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு எனவும் தெரிவித்த அதேவேளை,உண்மையை நிலைநாட்டி கண்டறிந்து நீதியாயி நிலைநாட்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படவேண்டும் என வலியுறுத்தினார்.
புதியஅரசியல் யாப்பு உருவாக்க நடைமுறைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் தமிழ் மக்களின் நீண்டகால அதிகாரப்பகிர்வு கோரிக்கையானது ஒரு அரசியல் யாப்பினூடாக தீர்வு காணப்படவேண்டிய ஒன்றாகும் என்பதனை வலியுறுத்திய அதேவேளை
இந்த விடயம் தொடர்பில் கடந்த 30வருடகாலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமையையையும் எடுத்துக்காட்டினார். கடந்தகாலங்களில் ஒவ்வொரு ஜனாதிபதியும் அரசாங்கங்களும் இது தொடர்பில் எடுத்து வந்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய
இரா சம்பந்தன் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் இனிமேலும் தாமதமின்றி முன்னெடுக்கப்படவேண்டும்எனவும் வலியுறுத்தினார். நாம் பிளவுபடாத பிரிக்கமுடியாத ஒருமித்த இலங்கை நாட்டிற்குள்தீர்வொன்றினை எதிர்பார்க்கிறோம்,
இந்த கோரிக்கைக்கு எமது மக்கள் தொடர்ச்சியாக தேர்தல்களிலேஅங்கீகாரம் வழங்கியுள்ளார்கள் மக்களது இந்த ஜனநாயக தீர்ப்பு மதிப்பளிக்கப்படவேண்டியஒன்று என்பதனையும் சுட்டிக்காட்டினார்
. நாங்கள்இந்த நாட்டில் சம உரிமையுள்ள பிரஜைகளாக சுய கௌரவத்துடம் சுய மரியாதையுடனும் வாழ விரும்புகிறோம் மக்களுக்கு தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பில் முடிவெடுக்கும்அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார்.
மேலும் எமது இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவதனை நாம் விரும்பவில்லை கடந்த கால யுத்தத்தின் நிமித்தம் அவர்கள் அநேகஇழப்புகளை சந்தித்தது விட்டார்கள் என்பதனையும் எடுத்துக்காட்டினார்.
தமிழ்தேசியகூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் இங்கு கருத்து தெரிவிக்கையில், புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் அரச தலைவர்கள்மத்தியில் அரசியல் விருப்பு குறைவாக காணப்படுவதாக தெரிவித்த அதேவேளை
அநேக விடயங்கள்தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டபோதிலும் இன்னும் ஒரு தயக்க நிலை அரச தலைவர்கள் மத்தியில்காணப்படுவதாக தெரிவித்தார். கிடைத்துள்ளஇந்த சந்தர்ப்பத்தினை தவற விடமுடியாது என வலியுறுத்திய இராசம்பந்தன் தவறவிடும் பட்சத்தில் ஆட்சியில்
யார் இருந்தாலும் இந்த நாடு பின்னோக்கியே செல்லும் எனவும் சுட்டிக்காட்டினார். ஆகவே எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து நீண்டகால ஐந்தே பிரச்சினைக்கு சரியான தீர்வினை காண முன்வருவது அவசியம் எனவும் அவ்வாறு இது தீர்க்கப்படாவிடில் இந்த நாடு மீண்டும் ஒரு வன்முறையை நோக்கி நகரும்
எனவும் தெரிவித்தார். ஐ.நா.மனித உரிமைபேரவையின் தீர்மானம் தொடர்பில் கருது தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள் அரசாங்கம் இணைந்து முன்மொழிந்த இந்த பிரேரணை தொடர்பில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் எனவும்,
இந்த தீர்மண்ணம் முளுமையாகநடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் அரசாங்கம் தனது மக்களுக்கு நீதியை செய்வதிலிருந்துவிலக முடியாது எனவும் தெரிவித்தார்.
இந்ததீர்மானமானது மாற்றமடையாமல் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் சர்வதேச சமூகத்திற்கு வழங்கியவாக்குறுதிகளை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில்பிரித்தானியாவின் பங்களிப்பினை பாராட்டிய இரா சம்பந்தன் அவர்கள் புதிய அரசியல் யாப்பு உள்ளிட்ட விடயங்கள் சரியானமுடிவினை அடையும் வரை மிக நெருக்கமான சர்வதேச பங்களிப்பு அவசியம் அளவும் அதனை தவிர்க்கமுடியாது எனவும் வலியுறுத்தினார்.
சுமார் ஒருமணித்தியாலம் இடம் பெற்ற இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் மற்றும் தூதரக அதிகாரிகளும்கலந்து கொண்டிருந்தனர்.